தமிழ்நாடு

3 தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா

DIN

மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய ஆணைய அதிகாரிகளிடம் அண்மையில் ஆலோசனை நடத்திய அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் 19-இல் தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சியில் 157 அமைவிடங்களில் 245 வாக்குச் சாவடிகளும், தஞ்சாவூரில் 88 அமைவிடங்களில் 276 வாக்குச் சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 97 இடங்களில் 291 வாக்குச் சாவடிகளும் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.
தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறியப்பட்டுள்ளன. அரவக்குறிச்சியில் 980 பேரும், தஞ்சாவூரில் 1,104 பேரும், திருப்பரங்குன்றத்தில் 1,164 பேரும் வாக்குப் பதிவின் போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
3 தொகுதிகளின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மத்திய அரசுப் பணியைச் சேர்ந்தவர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
மின்னணு இயந்திரங்கள்:

அரவக்குறிச்சி தொகுதியில் 245 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 980 வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவையாகும். தஞ்சாவூரில் 276 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,104 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், திருப்பரங்குன்றத்தில் 291 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,164 வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேவையாக உள்ளன. ஆனால், அதிகமாகவே இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளளன.
கண்காணிப்புப் பணியில்...:
அதிகளவு பணப் புழக்கத்தைக் கண்காணிக்க வருவாய்த் துறை (புலனாய்வு) அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT