தமிழ்நாடு

காவிரி விவகாரம்: இரு மாநில மக்களின் பகைக்கு மத்திய அரசே காரணம்

காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு நடுநிலை காக்கத் தவறியதன் காரணமாக, இரு மாநில மக்களிடையே பகை உணர்வு மேலோங்கி வருகிறது

DIN

காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு நடுநிலை காக்கத் தவறியதன் காரணமாக, இரு மாநில மக்களிடையே பகை உணர்வு மேலோங்கி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்ற காரணத்தால், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 தினங்களுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதைக் கொண்டு சம்பா சாகுபடி செய்ய இயலாது. தமிழகம் கோரிய 50 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால்தான் ஓரளவுக்கு சம்பா சாகுபடி செய்ய இயலும்.
ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று, கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்த மாநில அரசு ஆதரவாக உள்ளது.குறைந்தப்பட்ச தண்ணீர் வழங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் முயற்சியையும் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் வேண்டும் என்று போராட்டம்; கர்நாடகத்தில் தண்ணீர் கொடுக்காதே என்கிற போராட்டம்.
இரு மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டிய மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. தொடர்ந்து இதுபோல் மௌனம் காத்து வருவதே இரு மாநில மக்களிடையே பகை உணர்வு மேலோங்கி வருவதற்குக் காரணம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்! | Chennai

SCROLL FOR NEXT