முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

வகாசியில் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை திருடுபோய்விட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2016 at 4:59 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:47 PM
சிவகாசி: சிவகாசியில் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை திருடுபோய்விட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி-கட்டளைப்பட்டி சாலைப் பகுதியில் வசிப்பவர் மலர்கொடி(37)இவர் இங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் ஞானராஜ். இவர் குளிர்பானக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை மலர் கொடி, தனது இருபிள்ளைகளுடன் பள்ளிக்கு சென்றுவிட்டார். ஞானராஜ் வீட்டைப்பூட்டிவிட்டு, கடைக்கு சென்று விட்டார்.
மாலை மலர்கொடி பள்ளிமுடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தலைவாசல் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்ததாம்.
உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடுபோயிறுப்பது தெரியவந்ததாம்.
இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.