தமிழ்நாடு

புதுச்சேரியில் பிஆர்டிசி மாணவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் சென்ற பிஆர்டிசி பஸ் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்கியதில் கண்ணாடி நொறுங்கியது.

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் சென்ற பிஆர்டிசி பஸ் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்கியதில் கண்ணாடி நொறுங்கியது.

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரியில் உரிய நீரை விடவும் வலியுறுத்தி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் செல்ல ஏதுவாக பிஆர்டிசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை காலை தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சை மடக்கிய மர்ம நபர்கள் மாணவ, மாணவியரை கீழே இறக்கினர்.

பின்னர் பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. இச்சம்பவத்தை அடுத்து பிஆர்டிசி பஸ்கள் இயக்கமும் நிறுத்தப்ப்டடது. இதுதொடர்பாக டி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பத்தில் டயர் எரிப்பு
இதே போல் அரியாங்குப்பம் கடலூர் சாலையில் மர்ம நபர்கள் சாலையின் நடுவே டயர்களை போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், போலீஸார் விரைந்து வந்து எரிந்த டயர்களை அகற்றினர். இதில் காவலர் அய்யனார் என்பவர் லேசாக காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT