முகப்பு
தமிழ்நாடு

நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்

நெய்வேலி 1-A பிரிவு சுரங்கத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலனவர்கள் என்.எல்.சி.க்கு வீடு, நீலம் வழங்கியவர்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:17 PM
பகிர்:

பண்ருட்டி: நெய்வேலி 1-A பிரிவு சுரங்கத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலனவர்கள் என்.எல்.சி.க்கு வீடு, நீலம் வழங்கியவர்கள்.

வியாழக்கிழமை அன்று வழக்கமாக பணிக்கு சென்றனர். அப்போது, ஒப்பந்த தொழிலாளருக்கு வேலை மறுத்துவிட்டு மாதத்திற்கு 26 ஷிப்ட் என்பதற்கு பதிலாக 17 ஷிப்ட் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனராம். பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க வளாகத்திலேயே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராத நிலையில் பணி நேரம் முடித்தவுடன் வீடு திரும்பினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் இப்பிரச்னை தொடர்ந்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டிக்கும் வகையில், இன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →