முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 82.44 அடியாகச் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், அணையின் நீர்மட்டம் 82.44 அடியாகச் சரிந்தது.

Updated On : 28 செப்டம்பர், 2016 at 5:44 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், அணையின் நீர்மட்டம் 82.44 அடியாகச் சரிந்தது.
கர்நாடகம் தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை தர மறுத்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை மூடியது. இதனால், கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,000 கன அடிக்கு கீழே குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 796 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.44 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 44.43 டி.எம்.சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.