சிவகாசியில் வங்கியில் போலி காசோலை கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற இருவர் தலைமறைவு
சிவகாசியில்செவ்வாய்கிழமை தனியார் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ21 லட்சம் பணப்பரிவர்த்தனைசெய்ய முயன்று தப்பியோடிவிட்ட இவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:52 PM
சிவகாசி: சிவகாசியில்செவ்வாய்கிழமை தனியார் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ21 லட்சம் பணப்பரிவர்த்தனைசெய்ய முயன்று தப்பியோடிவிட்ட இவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சிவகாசி மாரியம்மன்கோயில் அருதே தனியார் வங்கி உள்ளது.இந்த வங்கியின் தூத்துக்குடிகிளையில் கணக்கு வைத்திருக்கும் லட்சமணணன் மற்றும் 35வயது மதிக்கத்தக்க ஒருவரும் என இருவர் வங்கிக்கு வந்துள்ளனர்.
பெங்களூர் கேரமங்களாவில் இதே வங்கிகிளையில் கணக்கு வைத்துள்ளதாக ஹெர்பல்இன்டர்னேஷனல் என்ற பெயரிலான ரூ 21 லட்சத்திற்குகான காசோலையை கொண்டுவந்துள்ளனர்.அவர்கள் வங்கி ஊழியரிடம் இந்த ரூ21 லட்சத்திற்கான காசோலையை, தூத்துக்குடியில் கணக்கு வைத்திருக்கும் லட்சுமணணன் பெயரில் உள்ள கணக்கு பண பரிவர்த்தனை செய்யும் படி கூறியுள்ளார்கள்.
இதையடுத்து வங்கி ஊழியர் காசோலையை ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த காசோலை போலி எனதெரியவந்தது.
தொடந்து லட்சுமணணிடம் வங்கி ஊழியர் விசாரிக்கத்தொடங்கியதும் லட்சுமணணன் மற்றும் அவருடன் வந்தவரும் வங்கியை விட்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் மணிகண்டன்(38) கொடுத்தபுகாரின் பேரில் சிவகாசி கிழக்குபோலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிவிட்ட இருவரை தேடி வருகிறார்கள்.