முகப்பு
தமிழ்நாடு

சிவகாசி நகராட்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமாகா

சிவகாசி நகராட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.

Updated On : 28 செப்டம்பர், 2016 at 5:20 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:52 PM
சிவகாசி: சிவகாசி நகராட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.
சிவகாசி நகராட்சியில் தொடக்ககாலம் முதல் நகர் மன்றத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியினர் பெற்றுவந்தனர். 2011ல் நடைபெற்ற தேர்தலில் சிவகாசி நகராட்சியை முதல்முதலாக அதிமுக கைப்பற்றியது.
துணைத்தலைவர் பதவியையும் அதிமுகவே வைத்துக்கொண்டது.தற்போது நடைபெற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.ஆனால் சிவகாசி நகராட்யில் திமுக ,காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இணைந்து செயல்பட விரும்புகிறது.
சிவகாசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 18 வார்டுகளும், திமுகவிற்கு 15 வார்டுகளும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமாகா இந்தக்கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதால்,திமுக 3 வார்டுகளையும், காங்கிரஸ் 4 வார்டுகளையும் தமாகாவிற்கு விட்டுக்கொடுக்கிறது.இந்நிலையில் புதன்கிழமை தமாகா பிரமுகரான ஜி.அசோகன், காங்கிரஸ் பிரமுகரான ஏ.ஞானசேகரன் ஆகியோர் இணைந்து 10 வது வார்டு மற்றும் 23வதுவார்டில் வாக்கு சேகரித்தனர்.
மேலும் இது குறித்து திமுக விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை, காங்கிரஸ் மற்றும் தமாகா பிரதிநிதிகள் சந்தித்துப்பேச உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இக்கூட்டணியில் கம்யூனிஸ்ட்கட்சியினரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி பிரமுகர் மைக்கேல் கூறியதாவது:
காங்கிரஸ், தமாகா இணைந்து செயல்பட வேண்டும் என இங்குள்ள தொழிலதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அதன் படி உடன்பாடு ஏற்பட உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.