தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி ஊராட்சி முன்னாள் தலைவி சாவு

: சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவி, கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி இறந்தார்.

DIN

: சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவி, கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி இறந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கட்டளைபட்டி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி ருக்மணி (53). இவர் கட்டளைபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவி.
இவர் கடந்த 27-ஆம் தேதி தனது காரில், ஓட்டுநர் காளிதாஸ் (41) என்பவருடன் கன்னியாகுமரி வந்துள்ளார். இங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த நிலையில், ருக்மணி திடீரென காணாமல் போனாராம். இதுகுறித்து காளிதாஸ் புதன்கிழமை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளர் சகாயஜோஸ் தலைமையிலான போலீஸார், கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சென்றபோது சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் அருகே பெண் சடலம் மிதப்பதைப் பார்த்தனர். சடலத்தை மீட்ட அவர்கள் கன்னியாகுமரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

மோனிகா பாடலுக்காக மோனிகா பெலூச்சி கூறியதென்ன? பூஜா ஹெக்டே பெருமிதம்!

கூலி பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி!

விஜயகாந்தை அரசியல் குரு என விஜய் அறிவித்தால்...! - பிரேமலதா பேட்டி

கூலி ரிலீஸ்... ராமேஸ்வரத்தில் புனித நீராடி வழிபட்ட லோகேஷ் கனகராஜ்!

SCROLL FOR NEXT