மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று காலை வீட்டுக்கு திரும்பினார்.
சென்னை: கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று காலை வீட்டுக்கு திரும்பினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மார்ச் 22-ந்தேதி அன்று நள்ளிரவு சிகிச்சைக்காக ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்குத்தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க தலைமை கழகம் அப்பொழுது அறிக்கை வெளியிட்டது.
அதன் பிறகு சில நாட்களுக்கு முன்னால், போரூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், 'விஜயகாந்த் நலமாக உள்ளார், ஆண்டு பரிசோதனைக்ககாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வார்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அவர் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.