ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு: காவல் ஆணையர் கரண் சின்ஹா
ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு: காவல் ஆணையர் கரண் சின்ஹா
ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும். தேர்தல் சிறப்பு பார்வையாளர் மனோஜ் அகர்வால் நாளை சென்னை வருகிறார். தேர்தலின் போது ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆர்.கே. நகரில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 694 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (அம்மா) கட்சியின் சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்பட மொத்தம் 62 பேர் களத்தில் உள்ளனர்.