ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 4 காவல்துறை உதவி ஆணையர்கள் மாற்றம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடுஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 4 காவல்துறை உதவி ஆணையர்கள் மாற்றம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் ஆர்.கே. நகரில் 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்த குமார், ராயபுரம் உதவி ஆணையர் ஸ்டீபன், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், எம்.கே.பி. நகர் உதவி ஆணையர் ஜெயசிங் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து டிஜிபி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.