தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர்கள் சொன்னதும் சொல்ல மறந்ததும்; முழு அலசல்

ENS


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 15ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்துக்களை குறைந்து மதிப்பிட்டு, பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை அவர் நன்கு ஆராய்ந்த பிறகே வேட்பாளர்களின் மனுவை ஏற்றிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறிய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்புக்கும், உண்மையான சொத்து மதிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது என்பதுதான்.

அதாவது,

டிடிவி தினகரன் (அதிமுக அம்மா கட்சி வேட்பாளர்)

இடம்

அளவு (சதுர அடி)

கட்டடம்

பிரமாணப்
பத்திரம்

சொத்தின் மதிப்புசந்தை மதிப்புவித்தியாசம்
மயிலாப்பூர்21210001.08 லட்சம்25.13 லட்சம்42.30 லட்சம்31.41 லட்சம்
அடையாறு872675001.13 கோடி5.26 கோடி13.98 கோடி12.85 கோடி
திண்டிவனம்244371130271.73 கோடி2.23 கோடி2.23கோடி50.06 கோடி
மொத்தம்-2.98 கோடி7.74 கோடி16.64 கோடி13.66 கோடி 


மதுசூதனனின் (புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் )

இடம்

அளவு

(ஏக்கர்)

பிரமாணப் பத்திரம்சொத்து மதிப்புசந்தை மதிப்புவித்தியாசம்
ஆவடி3.1115 லட்சம்4.38 கோடி20.32 கோடி20.17 கோடி
திருவாலங்காடு3080 லட்சம்7.5 கோடி7.5 கோடி6.7 கோடி
கேகே நகர்840 சதுர அடி20 லட்சம்50.4 லட்சம்84 லட்சம்64 லட்சம்
கொட்டிவாக்கம்240 சதுரஅடி75 லட்சம்84 லட்சம்84 லட்சம்9 லட்சம்
மொத்தம் -1.9 கோடி13.22 கோடி29.50 கோடி27.6 கோடி

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் கல்வித் தகுதி
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 65% பேர் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்தவர்கள். 20% பேர் மட்டுமே பட்டதாரிகள்.

வேட்பாளர்களில் 44% பேர் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

குற்றவியல் பின்னணி
வேட்பாளர்களில் 7 பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தேமுதிக வேட்பாளர் மதிவாணன்,  சுயேட்சை வேட்பாளர் என். குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள்
வேட்பாளர்களில் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உட்பட 9 பேர் கோடீஸ்வரர்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தான் அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

சொத்துப் பட்டியலில் பின்தங்கினாலும், அதிகக்கடன் மற்றும் வருமானம் கொண்ட வேட்பாளர் பட்டியலில் டிடிவி தினகரன் முதல் இடத்தில் உள்ளார்.

மிக மோசமான விஷயம் என்னவென்றால் 70 சதவீத வேட்பாளர்கள் தங்களது வருமானம் குறித்தும், 28% வேட்பாளர்கள் தங்கள் பான் எண் குறித்தும் பதிவு செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’- எக்ஸ் தளத்தில் வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT