தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: சென்னை மாவட்டத்தில் 4 நாள் மதுக்கடைகள் மூடல்

தினமணி

ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (அம்மா) சார்பில் டிடிவி தினகரன், அதிமுக (புரட்சிதலைவி அம்மா) சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் சார்பில் லோகநாதன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 62 பேர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15ஆம் தேதியும் மதுக்கடை, பார்களை மூட வேண்டும் எனவும் உத்தரவை மீறி கிளப், ஓட்டல்களில் பார்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT