தமிழகத்திற்கு புது ஆளுனர் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
தமிழகத்திற்கு தற்போதுள்ள பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக புது ஆளுனர் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுதமிழகத்திற்கு புது ஆளுனர் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
தமிழகத்திற்கு தற்போதுள்ள பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக புது ஆளுனர் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்திற்கு தற்போதுள்ள பொறுப்பு ஆளுநருக்கு பதிலாக புது ஆளுனர் நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்பழகன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பொறுப்பு ஆளுநராக உள்ள அவரால் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. எனவே அவருக்குப் பதிலாக குறிப்பிட்ட அவகாசத்தில் ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.