தமிழ்நாடு

வருமான வரி சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்புண்டா? என். கோபாலஸ்வாமி பதில்

வருமான வரித்துறை சோதனைக்கும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கும் தொடர்பு இருப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையர் என். கோபாலஸ்வாமி பதிலளித்துள்ளார்.

ENS


சென்னை: வருமான வரித்துறை சோதனைக்கும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கும் தொடர்பு இருப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையர் என். கோபாலஸ்வாமி பதிலளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வரும் தகவல்கள் குறித்து தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையர் என். கோபாலஸ்வாமி கருத்துக் கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகம் மேற்கொண்ட நேர்காணலில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஏற்கனவே பணம் வாரி இறைக்கப்பட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்பதா?

ஒரு போதும் தேர்தல் ஆணையத்தை குறை சொல்ல முடியாது. ஒவ்வொரு வாக்காளர்களையும் கண்காணிப்பது என்பது முடியாத காரியம். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற விஷயங்களைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது.

அப்படியே கண்காணிக்க வேண்டும் என்றாலும், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் தேவைப்படுவார்கள். இது முடியாத காரியம்.

எனவே, பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று கூறும் அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் கூட ஜனநாயகத்தை காக்கும் வகையில் மனமாற்றம் பெற வேண்டும் என்று என். கோபாலஸ்வாமி கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற மோசமான சம்பவம் தமிழகத்தில் நடப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இது மிகவும் வெட்கக்கேடானது. தமிழகம் இதில் மிகவும் மோசமாக உள்ளது. தமிழக வாக்காளர்களும், வேட்பாளர்களும் பணத்தைக் கொடுக்கவும் வாங்கவும் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்றார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கும், தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாக அதிமுக அம்மா கட்சியினர் குறை சொல்வது பற்றி உங்கள் கருத்து என்று கேட்டதற்கு, சோதனைக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறிவது சரியல்ல. வருமான வரித்துறையினர் சோதனை செய்வதற்கு முன்பு பல காலம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். எனவே, தேர்தலுக்கும் சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதோடு, வேட்பாளர் வீட்டிலா சோதனை நடத்தப்பட்டது. பிறகு எப்படி அவ்வாறு கூற முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT