முகப்பு
தமிழ்நாடு

சிவனடியார் ஆறுமுகசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடுவதற்காக பல போராட்டங்களை நடத்திய சிவனடியார் உ.ஆறுமுகசாமி (94) மறைவுக்கு திமுக

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:15 PM
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடுவதற்காக பல போராட்டங்களை நடத்திய சிவனடியார் உ.ஆறுமுகசாமி (94) மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:

சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமி இயற்கை காலமானார் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவாக இருந்த இவர் காலமானது தமிழுக்கும், தமிழுணர்வுக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. சிவனடியாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழுணர்வு மிக்க சொந்தங்களுக்கும், சக சிவனடியார்களுக்கும் தலைவர் கருணாநிதி சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →