தமிழ்நாடு

வரும் தேர்தல்கள் நேர்மையாக நடக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

வரும் தேர்தல்களாவது நேர்மையாக நடக்கும் என்று நம்புவோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் கடைசி வரை இருந்து தாமதித்து முடிவெடுத்திருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தாகியுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு அடுத்து பணப்பட்டுவாடாவும் நடைபெற்றிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால், தேர்தல் தடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேர்மையாக நடைபெற முடியும் என்று உறுதியான நிலை வரும்போது தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே, வரும் தேர்தல்கள் நேர்மையான நடைமுறையில் நடக்கும் என்று நம்புவோம். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடு நடந்திருப்பதாலும், பணப்பட்டுவாடா அதிகமாக நடந்திருப்பதாலும், அதனால் போட்டியிடும் களம் சமதளத்தில் இல்லாமல் ஏற்றத்தாழ்வு உள்ள களமாக உள்ளதால் தேர்த்ல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்
தக்கது.
தாமதமான முடிவு: ஆனால், கடைசி நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட வாகன சோதனைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முதலிலேயே விதித்து தொகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தால், தேர்தல் ரத்தாகியிருக்காது.
ஆனால், அத்தனை வேட்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தொண்டர்கள் நேரம், காலம், கடுமையான உழைப்பு, பிரசாரம் அனைத்தும் வீணாகப் போகும் அளவுக்கு கடைசி நாள் வரை தாமதித்து முடிவு எடுத்திருப்பது
கவலை அளிக்கிறது.
தேர்தலில் ஊழலை ஒழிப்பதில் மட்டுமல்ல, அரசியலிலும் ஊழலை ஒழிப்பதற்கு சிறு அளவிலாவது இந்த ரத்து நடவடிக்கை வழி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT