தமிழ்நாடு

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி!

DIN

சாமளாபுரம்:  கோவை மாவட்டம் திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.பலர் காயமடைந்தனர்.

நெடுஞசாலை ஓரமாக உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப, மூடப்பட்ட கடைக்கு பதிலாக மற்றொரு கடையை கோவை மாவட்டம் திருப்பூரில் உள்ள சாமளாபுரத்தில் அதிகாரிகள் திறந்தனர். குடியிருப்பு பகுதிக்கு அருகிலமைந்துள்ளதாக பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதற்காக இன்று காலை 8 மணியில் இருந்து பொதுமக்கள் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அங்கு வந்த அதிகாரிகள் கடையை அங்கிருந்து அகற்றுவதாக உறுதி அளித்தனர். ஆனால் பொதுமக்கள்  அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.

இன்று மாலை 4.30 மணி அளவில் அங்கு போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைக்கும் நோக்கில் அவர்கள் தடியடியில் ஈடுபட்டனர். இந்த தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. பலருக்கு காயம் ஏற்பட்டது. 

தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வாகனங்களை பொதுமக்கள் கல்வீசி தாக்கினர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT