முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அணிகள் இணைய நிபந்தனை ஏதுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவது குறித்து, இதுவரை பேச்சு வார்த்தை நடக்கவில்லை. இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:18 PM
பகிர்:

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவது குறித்து, இதுவரை பேச்சு வார்த்தை நடக்கவில்லை. இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. எங்கள் தரப்புக்கு சாதகமாக நிலைமை மாறும் என நம்புகிறோம்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்வது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்கத கேள்விக்கு, அது குறித்து முழு விவரம் இப்போது தெரியவில்லை. முழு விவரம் தெரிந்த பின்னர் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →