முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 20 ஏப்ரல், 2017 at 11:03 AM
பகிர்:


சென்னை: ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நிதித் துறை அமைச்சர் இன்று செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ் நிர்பந்தம் கொடுத்ததால், அம்மா அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை.

தர்ம யுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று ஓபிஎஸ் நேற்று பேட்டி அளித்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயக்குமார் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisement

மேலும் அவர் பேசுகையில், கட்சியின் நலன் கருதி அனைவரும் முடிவு எடுத்து ஒதுக்கி வைத்துள்ளோம். அமெரிக்காவில் டிரம்ப்பின் வெற்றிக்கே நான் தான் காரணம் என்று கூட ஓபிஎஸ் சொல்வார் என்றும் அவர் கூறினார்.

பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.