தமிழ்நாடு

சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு

சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி

சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1996-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இவ்வழக்கில் நேரில் ஆஜராவதற்குப் பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மே 4 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT