தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் நியமனம்

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.
வழக்குரைஞர்கள் பிரதாப்குமார், சுப்பையா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் உள்ளிட்ட 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உறுப்பினர்கள் நியமனத்துக்குத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம், சுப்பையா, பாலுசாமி ஆகியோரை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் ஐந்து பேரும், ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, பின் அவர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT