உதகை அத்திக்கலில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை: பொதுமக்கள் அதிர்ச்சி
அத்திக்கலில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வெளியாக தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அத்திக்கலில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை வெளியாக தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை அத்திக்கல் பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இதே போல் பூமிக்கடியில் இருந்து புகை வெளியான போது தில்லியில் இருந்து நில ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடந்த பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கடியில் புதைந்த மரங்கள், கழிவுகள் மக்கி கரியாக மாறி அதிலிருந்து புகை வெளியாவதால் அச்சப்பட தேவையில்லை எனத் தெரிவித்தனர்.
தற்போது அதே பகுதியில் வெளியாகும் புகையால் பொதுமக்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக அத்திக்கல்லை சுற்றியுள்ள 20 கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Advertisement
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உடனே ஆராய்ந்து உண்மை நிலையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.