இளையராஜா இசையில் உருவாகும் வால்மீகி ராமாயணா!
வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய நாவலாசிரியரான ஆனந்த் நீலகண்டனின் திரைக்கதையைத் தழுவி இயக்குநர் பாவ்னா தத்தா தல்வார் இயக்கும் புதிய திரைப்படம் ‘வால்மீகி ராமாயணா’.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் வினோத் பிரதான், தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபூ சிரில், ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி போன்ற பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நடிகர்கள் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேற்று வெளியான புதிய போஸ்டரில் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வால்மீகி ராமாயணா திரைப்படம் வருகிற அக்டோபர் 2, 2026 காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகாததால் இது அனிமேஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
ஏற்கனவே, ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ’ஜெய் ஹனுமான்’ என்ற திரைப்படம், மற்றும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகும் ’ராமாயணா’ என ராமாயணம் பற்றிய திரைப்படங்கள் இந்திய சினிமாவில் பெரிய பொருட்செலவில் தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Ilaiyaraaja joined as music composer of Valmiki Ramayana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.