ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!
போரில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டது..
இஸ்ரேல் - அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை அந்நாடு இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டது.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டை தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த போர் பதற்றத்தின் காரணமாக இதுவரை ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவரான அப்பாஸ் மஸ்ஜெதி இந்தத் தகவலை வெளியிட்டார். உயிரிழந்தவர்களில் நால்வர் மட்டுமே இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளனர். உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள் ஆவார். மேலும், 383 பேர் 18 வயது மற்றும் அதற்குள்பட்ட சிறார்கள்.
Advertisement
Advertisement
ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதன் பின்னணியில், உயிரிழப்புப் பட்டியலில் பாதுகாப்புப் படையினரும் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
Iran on Monday offered a new death toll for the war with Israel and the United States, with its forensic chief saying at least 3,375 people had been killed in the conflict.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.