தமிழ்நாடு

மின்னணு குடும்ப அட்டை: விவரங்கள் மாற்றம், புகைப்படம் பதிவேற்ற வழிமுறைகள்

DIN

மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோர் www.tnpds.gov.in  என இணையதள முகவரி மூலம் சரியான விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரியான விவரங்கள், புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்: கணினி உதவியுடன் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதில் பயனாளர் நுழைவு என்கிற பக்கத்தை கிளிக் செய்து, ஏற்கெனவே உங்கள் குடும்ப அட்டையுடன் இணைத்த செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
உடனே உங்கள் செல்லிடப்பேசிக்கு 7 இலக்கத்தில் ஓ.டி.பி ரகசிய எண் வரும், அதை உரிய இடத்தில் பதிவிட்டு பயனாளர் குடும்ப அட்டை விவரங்கள் அடங்கிய பக்கத்திற்கு எளிதாக செல்ல முடியும்.
அப்பக்கத்தில் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதியை கிளிக் செய்தால் குடும்ப அட்டைதாரரின் முழு விவரங்கள் அடங்கிய ஒரு பக்கம் தோன்றும்.
அதில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதை குடும்ப அட்டைதாரர்களால் மேற்கொள்ள முடியும். இந்த மாறுதலின் போது அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்வது அவசியம்.
அதில், குடும்ப அட்டைதாரர்கள் தனது குடும்பம் பற்றிய முழு விவரங்களையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அளிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின், அந்த விவரங்களை சேமிக்க வேண்டும்.
மேலும், "TNPDS"' என்ற செல்போன் செயலி மூலம் குடும்ப அட்டைதாரரின் புகைப்படம் மட்டும் பதிவேற்றம் செய்ய முடியும்.
இதன் மூலம், தனது குடும்பத்தின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் மாறாமல் சரியான முறையில் குடும்ப மின்னணு அட்டை அச்சிட்டு பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT