தமிழ்நாடு

தமிழகத்தில் எச்.ராஜா நடமாடவே முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் எச்சரிக்கை

DIN

திருச்சி: நாவடக்கம் இல்லாமல் பேசிவரும் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தமிழகத்தில் நடமாடவே முடியாது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறுபவர் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சமீபத்தில் செய்தியாளர்களை தேசத்துரோகி, என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி, இத்தாலிக்காரி என வசை பாடி சர்ச்சையில் சிக்கினார்.  

இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் எச்.ராஜாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு குழுவினருக்கு இஸ்லாமிய பயங்ரவாதகளுடன் தொடர்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அய்யாக்கண்ணுவையும், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த ஷேக் உசேனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.

இது தமிழக விவசாயிகள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எச். ராஜாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், நாவடக்கம் இல்லாமல் தொடர்ந்து பேசி வரும் எச்.ராஜா. சோனியாவை தவறாக பேசிய அவர், தற்போது 40 நாட்களாக உயிரை பணயம் வைத்து கடும் வெயில், பனியில் போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணுவை தீவிரவாதியுடன் தொடர்பு படுத்தி பேசியுள்ளார். இதுபோன்று எச்.ராஜா தொடர்ந்து பேசி வந்தால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் இணைத்து ஆபாசமாக பேசினார். இதற்காக அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT