தமிழ்நாடு

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் திருவாரூர் பக்தவத்சலம் இசை நிகழ்ச்சி

DIN

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் பக்தவத்சலம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஏப். 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் 3-ஆம் நாள் இசை நிகழ்ச்சியாக மன்னார்குடி எம்.எஸ்.கே. சங்கரநாராயணன், எம்.எஸ்.கே. வெங்கடேசன் நாகசுரம், திருவாளபுத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி, திருப்புங்கூர் டி.ஜி. முத்துக்குமாரசாமி சிறப்புத் தவில் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, டி.என்.எஸ். கிருஷ்ணா (பாட்டு), எம்.ஆர். கோபிநாத் (வயலின்), சேலம் கே. சீனிவாசன் (மிருதங்கம்), அபிஷேக் ரகுராமன் (பாட்டு), பி.யூ. கணேஷ் பிரசாத் (வயலின்), ஆனந்த் அனந்தகிருஷ்ணன் (மிருதங்கம்) இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, லயமதுரா கலைமாமணி மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (பாட்டு), சோழபுரம் வெங்கடேசன் (நாகசுரம்), அத்துல்குமார் (புல்லாங்குழல்), விட்டல் ராமமூர்த்தி (வயலின்) குழுவினரின் தெய்வீக இசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா சமிதி தலைவர் எஸ். சுவாமிநாதன், துணைத் தலைவர் எஸ்.வி.டி. கனகராஜ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT