முகப்பு
தமிழ்நாடு

அன்னவாசல் அருகே உள்ள அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரிக்கு சீல்? 

அன்னவாசல் அருகே சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியை முடக்க வருமான வரித்துறையினர் புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவுத்துறைக்கு

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

அன்னவாசல் அருகே சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியை முடக்க வருமான வரித்துறையினர் புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவுத்துறைக்கு அனுப்பிய சுற்றறிக்கையைத் தொடர்ந்து கல்குவாரிக்கு பத்திரப்பதிவுத்துறையினர் இன்று சீல்வைக்கப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள திருவேங்கைவாசலில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு செந்தமான வி. ரெடிமிக்ஸ் மற்றும் ராசி புளூமெட்டல் என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ஆர். கே. நகரில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் சென்னை, இலுப்பூர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஏப், 7 ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைபற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த ஏப், 11 ம் தேதி 10 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் மத்திய துணைராணுவப்படை வீரர்கள் 8 பேருடன் கல்குவாரிக்கு வந்தனர் பின்னர் குவாரி முழுவதையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளே வெளியே யாரையும் அனுமதிக்காமல் சோதனை மேற்கொண்டனர்.  

அதனைத்தொடர்ந்து, கனிமம் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக ஆழம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்றும் சுற்றி உள்ள புறம்போக்கு நிலம் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து குவாரி இயங்கி வருகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வந்தது 

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 28 ம் தேதி வருமானவரித்துறையினர் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளிட்ட சில அசையா சொத்துக்களை முடக்க அறிவுறித்தி புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் சி. சசிகலா வுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் வருவாய்துறை அதிகாரிகள் உதவியுடன் கல்குவாரிக்கு சீல்வைக்கப் போவதாக இன்று வெளியான தகவலால் இலுப்பூர், திருவேங்கைவாசல் பகுதியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 
.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.