தமிழ்நாடு

டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும்: பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் பேட்டி! 

DIN

பெங்களூரு: சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் கூறிய, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இன்று பெங்களூரு சென்று அங்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்தார்.

ஏறக்குறைய ஒருமணிநேர தாமதத்திற்கு பிறகே அவரால் சசிகலாவை சந்திக்க முடிந்தது. சந்திப்புக்குப் பின் சிறை  வாயிலில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சிறையில் சசிகலா நலமாக இருக்கிறார்.அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதர கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதையேதான் அவரும் சாப்பிடுகிறார். 

முன்பே கூறியபடி அதிமுக இரு அணிகளின் இணைப்புக்கு என்று 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே நான் கூறியபடி வழக்கம் போல் கட்சிப்பணிகளை ஆற்ற உள்ளேன்.  

அதற்காக விரைவில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளேன். அது எப்பொழுது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். கட்சியின் துணை பொதுச் செயலாளரான என்னை யாரும் அலுவலகம் செல்லாமல் தடுக்க முடியாது.

எனக்கு ஆதரவு அளித்தால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறார்கள். தற்பொழுது எனக்கு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. யாருடனும் சண்டையிடுவது என் இயல்பு கிடையாது.

நான் பள்ளி கல்லூரி பருவத்திலிருந்தே நடிகர் கமலின் ரசிகன். அரசியலுக்கு நடிகர் கமல் வர விரும்பினால் அவர் தாராளமாக வரலாம். அவரை யாரும் தடுக்க இயலாது அதே நேரம் அரசாங்கத்தின் மீது புகார்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதனை ஆதாரத்துடன் செய்ய வேண்டும்      

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் கூறிய, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும்.

துணை ஜனாதிபதி தேர்தலிலும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆணையின்படி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT