முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் குறைந்து தமிழகத்தில் இதமான வானிலை நிலவுகிறது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 8. செ.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →