தமிழ்நாடு

டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை: ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி பேட்டி

DIN


ஸ்ரீபெரும்புதூர்:  டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

அவர் அளித்த பதவியை பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியும் தனக்கும், டிடிவி. தினகரன் அறிவித்த பதவிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியில் இடம் பெற்றவர்கள் தங்களுக்கும் டிடிவி. தினகரனின் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT