விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக: முதல்வர் பழனிசாமி
அணிகள் விரைவில் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவைக் காண்போம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
அணிகள் விரைவில் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவைக் காண்போம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த சிலர், அதிமுகவில் இணையும் நிகழ்வு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:
தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவுகிறது. இதனைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவையான நிதியை ஒதுக்கி பொது மக்களுக்கு குடிநீர் அளித்து வருகிறோம்.
ஒன்றுபட்ட அதிமுக: அதிமுகவின் அணிகள் இணைந்து விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்ப்போம். பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையில் ரூ.1,000 கோடி செலவில் மூன்று ஆண்டுளில் 100-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். இந்த ஆண்டு அணைகள் கட்டுவதற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.