தமிழ்நாடு

'நானோ தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா'

DIN

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மைய ஆய்வக இயக்குநர் டி.கே.அஸ்வால் கூறினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத்துறை சார்பில் 4-ஆவது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்கு தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்க மலரை வெளியிட்டு அஸ்வால் பேசியது:
நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சீனா முதலிடத்தையும், அமெரிக்கா 2-ஆவது இடத்தையும், ஜப்பான் 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் நானோ தொழில்நுட்ப நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
நானோ தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா, அமெரிக்கா 4-ஆவது கட்ட வளர்ச்சிக்குத் தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ள நிலையில் இந்தியா ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. கடந்த ஆண்டில் சீனா 50 ஆயிரத்து 413 நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அமெரிக்கா 23 ஆயிரத்து 600 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்தியா 612 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.
நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இந்தியாவின் பின்தங்கிய நிலைக்கு முக்கியக் காரணம் போதிய நிதி ஒதுக்கப்படாததுதான். ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலையும் உள்ளது.
இதர நாடுகளின் தொழில்நுட்பச் சாதனங்களைச் சார்ந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலைதான் பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணம். அறிவாற்றல் மிக்க இளைய தலைமுறை மாணவர்கள் நானோ தொழில்நுட்பத்துறை ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு நிகரான வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், 3 நாள் சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்கும் ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தைவான், நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த 52 ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஊடகத் தொடர்பாளர் மார்க் நாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT