துணைகளை நம்பி தொடரும் பயணம்: முரசொலி பவழ விழாவுக்கு கருணாநிதி வாழ்த்து!
கட்சி , அரசியல் அனைத்தையும் தாண்டி ஆதரவளிக்கும் துணைகளை நமபி தனது பயணம் தொடர்வதாக, முரசொலி பவழ விழாவுக்கான வாழ்த்து செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சி , அரசியல் அனைத்தையும் தாண்டி ஆதரவளிக்கும் துணைகளை நமபி தனது பயணம் தொடர்வதாக, முரசொலி பவழ விழாவுக்கான வாழ்த்து செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பவழ விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி திமுக தலைவர கருணாநிதி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு
கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி.
இத்தகைய ஆதரவளிக்கும் துணைகளை என்னை, நம்பிக்கையுடன் எனது பயணம் தொடர்கிறது.
முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை, பெருமூச்சினால் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன.
என் கடன் எப்பொழுதும் பணி செய்து கிடப்பதே
இவ்வாறு திமுக தொண்டர்களுக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.