தமிழ்நாடு

குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமை

DIN

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள தூதூர்மட்டம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை புகுந்த காட்டெருமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூதூர்மட்டம் முத்துமாரியம்மன் கோயில் தெரு, ஒட்டமல்லன் தெரு, திலகர் நகர், பி.சி.காலனி, எம்.எம்.பி. காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், முத்துமாரியம்மன் கோயில் தெருவுக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த காட்டெருமை அங்குள்ள மேராக்காய் தோட்டத்தை சேதப்படுத்தியது. பின்னர், குடியிருப்பு வழியாக ஒட்டமல்லன் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது.
குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமைகள் நுழையாமல் இருக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT