தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி நிலம் சென்னையில் மீட்பு: 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரிகள் அதிரடி

தினமணி

சென்னையில் 18 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடியிலான நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடியாக மீட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிக்குச் சொந்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள், கட்டடங்கள் உள்பட அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன.

அந்த வகையில், சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூ சாலை கதவு எண் 42-ல் (அடையாறு பிளாக்-5, நகர புல எண் 2) 11 கிரவுண்ட் நிலம் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி.

இங்கு சென்னையைச் சேர்ந்த பாலாஜி 18 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகுழந்தை அங்காளம்மன் கோயிலை கட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அருணாசலேஸ்வரர் கோயில் அதிகாரிகள் கவனிக்கவில்லை. இதனால், இந்தக் கோயில் தனக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று பக்தர்களை நம்ப வைத்து கோயிலில் பூஜைகள், விழாக்களை பாலாஜி நடத்தி வந்துள்ளார்.

ரூ.50 கோடி சொத்து மீட்பு: இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகித்து, பணம் வசூலிக்க நியமிக்கப்பட்ட கோயில் ஊழியரும், எழுத்தருமான மு.தியாகராஜன் இந்த ஆக்கிரமிப்பு சொத்து குறித்து கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதனிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் துணையுடன் இந்த நிலத்தை இணை ஆணையர் மீட்டார்.
 கட்டடங்கள் இடிப்பு: மேலும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த கோயில் கட்டடங்களை இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், சென்னை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பா.விஜயா, கோயில் உதவிச் செயற்பொறியாளர் பொன்.கல்யாணசுந்தரம் ஆகியோர் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினர். பின்னர், கோயிலுக்குச் சொந்தமான 11 கிரவுண்ட் நிலத்தையும் முழுமையாக அதிகாரிகள் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT