தமிழ்நாடு

வறண்டு கிடக்கும் பூண்டி ஏரி

DIN

கடுமையான வெப்பத்தாலும், பருவ மழை பொய்த்ததாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் வறண்டு, தரைப்பகுதி வெடித்து கிடக்கிறது. ஆந்திர மாநில அரசிடம் பேசி, கிருஷ்ணா நதி நீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு ஆண்டுதோறும், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து 12 டிஎம்சி தண்ணீர் பெறப்படும். இதனுடன், பருவ மழை காலத்தில் சேகரமாகும் நீர், இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து சென்னை மாநகரக் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டில் கடுமையான கோடை வெப்பத்தாலும், கடும் வறட்சியாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கியது.
மேலும், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தேவையான அளவு நீர் திறக்கப்படவில்லை. இதனால், பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலுமாக வற்றி, கட்டாந்தரையாக காட்சி
யளிக்கிறது.
இது சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
ஏரியை நம்பியிருந்த மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் முற்றிலுமாக குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT