தமிழ்நாடு

மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு

DIN

மணல் தட்டுப்பாடு பிரச்னைக்கு ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு காணப்படும் என பொதுப்பணித்துறை உறுதியாக தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு முக்கிய மூலப்பொருளாக மணல் விளங்குகிறது. மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதனால், ரூ.10 ஆயிரம் கோடி அளவில் கட்டுமானத் திட்டங்கள் முடங்கியுள்ளன.
கடந்த 6 மாதங்களில் மணல் குவாரிகள் பெருமளவில் மூடியதால், மணல் தட்டுப்பாடு பிரச்னை வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுபோல், கட்டுமானத் தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் வேலையிழந்துள்ளதோடு, அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் 65 ஆயிரம்: இதற்காக, ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை அரசே நேரடியாக செய்யத் திட்டமிட்டது. அதன்படி, கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, ஆன்லைனில் லாரிகள் பதிவைத் தொடங்கின.
அதன்படி, தற்போதுள்ள 26 குவாரிப் பகுதிகளில் மட்டும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் பதிவு செய்து, காத்திருக்கின்றன. அதோடு, நாள்தோறும் தேவையான 55 ஆயிரம் லோடு மணலுக்கு மாறாக 10 ஆயிரம் லோடு மணல் கூட கிடைப்பதில்லை.
மணல் விநியோகம் சீராகுமா?: அதுபோல், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அரசு சார்பில் மணல் குவாரிகளைக் கண்காணிக்க திட்ட இயக்குநரை அரசு நியமித்தது. இருப்பினும், முறையாக பதிவு செய்த மணலை உள்ளூர் வாசிகளின் கெடுபிடிகளால் மணலை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், அண்மையில் அரசு குவாரிகளில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது உள்ளூர்வாசிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, கட்டுமான தொழிலாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சீராக மணல் கிடைக்கவும், புதிய குவாரிகளை திறக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில், லாரிகள் விவரங்கள் பதிவு செய்து அதன் மூலம் சீரான மணல் விநியோகத்துக்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மணல் தட்டுப்பாடு பிரச்னை நீண்ட நாள்களாக உள்ளது. இதற்காக, அரசு ஆன்லைன் மணல் விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்காக, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடைமுறைச்சிக்கல்: அதோடு, 3 வாரங்களுக்கு முன்பே மணல் விநியோகம் செய்யப்படுவதற்கான வழிமுறைகளைதெரிவித்துள்ளோம். குவாரி பகுதியில் அனைத்து லாரிகளையும் கண்காணித்து மணல் விநியோகிப்பதற்கான ஆட்கள், உள்ளூர் வாசிகளின் கெடுபிடிகள் என நடைமுறைச் சிக்கல் உள்ளன.
முகாம்களில் லாரிகள் பதிவு: சீராக மணல் விநியோகம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, ஆகஸ்ட் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு முகாமில், அந்தந்த குவாரி பகுதிகளில் காத்திருக்கும் லாரிகள் மற்றும் அதன் உரிமையாளர் குறித்து சான்றிதழ் விவரங்களை பொதுப்பணித்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு: இதன் மூலம், போலி வாகன எண் பதிவு கொண்ட லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபட முடியாது. அதுபோல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட லாரிகள் முறையாக மணல் எடுத்தச் செல்லமுடியும். இந்த முகாம்களில் வாகன பதிவு விவரங்கள் முடிந்தவுடன், ஓரிரு வாரங்களுக்குள் மணல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறை அலுவலகங்களில் மணல் லாரி, அதன் உரிமையாளர் சான்றுகள் பதியப்படவுள்ளன. அதன்படி, 6 டயர் கொண்ட மணல் லாரிகள் 2 யூனிட் லோடு-ம், 10 டயர் கொண்ட மணல் லாரிகள் 3 யூனிட் லோடு வரையும் மணலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பதிவு எண், இதர கன ரக லாரிகள் இனி மணல் கடத்தலில் ஈடுபட இயலாது. இதனை வரவேற்கிறோம். அதன்படி, வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குப் பிறகு மணல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT