தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்தது

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 42 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு நொடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் அன்று காலை 41.04 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 41.95 அடியாக உயர்ந்தது. மேலும், அணைக்கு நொடிக்கு 8,113 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீருக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 13.15 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT