தமிழ்நாடு

அமித்ஷா வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஆகஸ்ட் 22-ந் தேதி 3 நாள் தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை, கோவை மற்றும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் 3 நாள் அரசியல் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். ஆகஸ்ட் 22-ந் தேதி முதல் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த பயணத்தின் போது, தமிழகத்தில் ஏற்பட்டு வருகிற அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கவுள்ளார். 

அமித்ஷாவின் இந்தப் பயணத்துக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மாறும். தமிழகத்தின் நலன் கருதியே நீட் தேர்வு இங்கும் நடைமுறைபடுத்தப்பட்டது. அது நீக்கப்பட்டால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். 

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் கூட இந்திய அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இணையாக போட்டியிட முடியும். இதனால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT