தமிழ்நாடு

முதல்வரை 420 எனக் கூறுவதில் எந்த பயமும் இல்லை: டிடிவி தினகரன்

தினமணி

முதல்வரை 420 எனக் கூறுவதில் தனக்கு எந்த பயமும் இல்லை என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடையூறுகளைத் தாண்டி நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். குழப்பதை ஏற்படுத்தவே தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. 

எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஒரு விபத்து. முதல்வரை 420 எனக் கூறுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் கிடைக்கும். அதிமுக தொண்டர்களை எடப்பாடி அணியினர் ஏமாற்றுகின்றனர். யார் மீதும் எந்த பயமும் எனக்கு இல்லை. எப்போது தேவையா அப்போது அறுவை சிகிச்சை செய்வோம். 

இரட்டை இலைச் சின்னத்தை நாங்கள் கட்டாயமாகப் பெறுவோம். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். பதவி இருக்கின்ற காரணத்தினால் ஆடுகிறார்கள், திருந்தவில்லை எனில் திருத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT