தமிழ்நாடு

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார் கமல்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தினமணி

குழம்பிய குட்டையில் கமல் மீன்பிடிக்க முயற்சிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்போரில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். எண்ணிக்கையை பொருத்தவரையில் நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் இருக்கிறோம்.

காழ்ப்புணர்ச்சியால் சிலர் கருத்து கூறுகின்றனர், நாங்கள் பெரும்பான்மையுடன் உள்ளோம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வருவாய்த்துறை சார்பில் 32 மாவட்டங்களில் நடத்த திட்டம். முதற்கட்டமாக மதுரையில் நடைபெற்றது. இன்று கடலூரில் நடைபெறுகிறது. 

கர்நாடகாவில் அரசியல் செய்யத்தான் புகழேந்திக்கு அனுமதி தரப்பட்டுள்ளது? தமிழகத்தில் அல்ல. இரு அணிகள் அணைவதற்கான முகூர்த்த தேதி இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT