file photo 
தமிழ்நாடு

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

DIN


சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

உணவு செலுத்துவதற்கான குழாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கருணாநிதி இன்று காலை 6.45 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்படுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சுமார் 4 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் பூரண குணமடைந்ததை அடுத்து, காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT