தமிழ்நாடு

விக்டோரியா மகாராணி பதவியேற்பு பொன்விழா ஆண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

DIN

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் விக்டோரியா மகாராணி பதவியேற்பு பொன்விழா ஆண்டு கல்வெட்டு வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவர் மேஜர் ஜி. இருளப்பன் தெரிவித்தது:
1837, ஜூன் 20 ஆம் தேதி விக்டோரியா மகாராணி பதவியேற்றதையொட்டி, பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், 1887, ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட கல்வெட்டு, அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்ட போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதை அனைத்து துறை மாணவர்கள் பார்வையிட்டனர். பிறகு இந்த கல்வெட்டு கல்லூரியில் உள்ள வரலாற்று தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1876 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி இந்திய பேரரசியாக விக்டோரியா மகாராணி அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT