தமிழ்நாடு

அதிமுக அணிகள் ஓரிரு நாள்களில் இணையும்: அன்வர் ராஜா எம்பி

DIN

அதிமுக அணிகள் ஓரிரு நாள்களில் இணையும் என்று அதிமுக மக்களவை உறுப்பினர் ஏ.அன்வர் ராஜா கூறினார்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் உள்ள விழுப்புரம்-திண்டுக்கல் இடையேயான பகுதியை இருவழிப் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மணப்பாறை-கல்பட்டிச்சத்திரம் இடையே இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. அண்மையில் இந்தப் பணிகளும் நிறைவடைந்தன. மேலும், மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட 14 இடங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டன, சோழவந்தான், அம்பாத்துரை, சமயநல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மூன்று நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்த புதிய சேவைகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு, ரயில்வே பவனில் இருந்து சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் அதிமுக மக்களவை உறுப்பினர் ஏ.அன்வர் ராஜா, திண்டுக்கல் அதிமுக மக்களவை உறுப்பினர் எம்.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி, கோட்ட மேலாளர் நீனு இட்டியரா, கூடுதல் கோட்ட மேலாளர் பி.வி.முரளிகிருஷ்ணா, கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஏ.அன்வர் ராஜா எம்பி செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அவசரமாக முடிவுகளை எடுக்க முடியாது. இரு அணிகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது. தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொள்ள உள்ளதால், ஓரிரு நாள்களில் அணிகள் இணைப்பு நடைபெறும். பதவிகள் தொடர்பாகவே இழுபறிகள் நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானவை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT