தமிழ்நாடு

சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

DIN


சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை வந்தார்.

அதிமுகவில் பிரிந்துள்ள இரு அணிகளும் இணைப்பிற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் எனவும், துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆளுநரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இணைப்பு இன்று நண்பகல் 12 மணிக்கே அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், சசிகலா நீக்கம் குறித்து உறுதியான எழுத்துப்பூர்மான முடிவை எடப்பாடி பழனிசாமி அணி அறிவிக்க வேண்டும் எனவும் அதற்குப் பின்னர்தான் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர்.

அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலம் செல்லும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு புறப்பட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாகச் சென்னை வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT