தமிழ்நாடு

உங்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க காத்திருக்கும் தினமணி-  சிவசங்கரி சிறுகதைப் போட்டி!

DIN

சென்னை: தமிழின் பாரம்பரியம் மிக்க பத்திரிகைகளில் ஒன்றான தினமணியும், தமிழ் எழுத்துலகில் முத்திரை பதித்த எழுத்தாளரான சிவசங்கரியும் இணைந்து, மொத்தப் பரிசாக ரூ.ஒரு லட்சம் வழங்கும் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகின்றனர்.

தனது நீண்ட பயணத்தில் இலக்கியத்திற்கு என எப்பொழுதும் சிறப்பிடம் கொண்டு இயங்கி வரும் பத்திரிகை தினமணி. அதே போல எழுத்துலகில் சிறுகதை, குறுநாவல், நாவல் மற்றும் கட்டுரை என பல்வேறு தளங்களிலும் தனது முத்திரையினை அழுத்தமாகப் பதித்திருப்பவர் எழுத்தாளர் சிவசங்கரி.

அகவை எழுபத்தைந்தை நெருங்கும் இந்த தருணத்தில் தனக்கென ஒரு தனியிடம் அமைத்து தந்த தமிழ் எழுத்துலகிற்கு, தரமான படைப்புகளை இனம் கண்டு சிறப்பு சேர்ப்பதை தனது கடமையாக சிவசங்கரி கருதுகிறார்.

அதற்காக தினமணியுடன் கைகோர்த்து மொத்தப் பரிசாக ரூ. ஒரு லட்சம் வழங்கும் 'தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி' என்னும் போட்டியினை இனி ஆண்டு தோறும் நடத்த உள்ளார்.

இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் கதைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.15 ஆயிரமும் மற்றும் ஆறுதல் பரிசாக பத்து கதைகளுக்கு தலா ரூ. ஆயிரமும் வழங்கப்பட உள்ளன.

போட்டிக்கு அனுப்பப்படும் கதைகளைத் தேர்வு செய்ய ஒரு குழுவும், தேர்தெடுக்கப்பட்ட கதைகளை மறுபரிசீலனை செய்ய மற்றொரு குழுவும் அமைக்கப்படும். பரிசுக்குரிய கதைகளும், தேர்தெடுக்கப்பட்ட பிற கதைகளும் தினமணி கதிரில் வெளியாகும்.

சிறுகதைகள் அனுப்ப கடைசித் தேதி: 31.08.2017.

எழுத்தாளர்களே, என்ன ரெடி ஆகிட்டீங்களா? 

அனுப்ப வேண்டிய முகவரி :

தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி,

29, இரண்டாவது முதன்மைச் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை 600 058

முழுமையான விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT