முகப்பு
தமிழ்நாடு

நீண்ட இழுபறிக்குப் பின் மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.

பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 31,692 மாணவர்கள் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →